Tikiwiki AssistantThank you for installing Tikiwiki!
|
1!!நூல்கள் அட்டவணை இன்று தமிழில் ஆயிரம், இலட்சமென இணைய தளங்கள் வந்துவிட்டன, செய்திகளுக்கும் பொழுது போக்குகளுக்கும் இருக்கும் இணைய தளங்கள் ஏராளம் ஏராளம், அவசர உலகில் விரைவு உணவுகள் தேடும் காலத்தில் பழஞ்சோற்றையும் தேடி சேர்க்கும் முயற்சி தான் இந்த சிலம்பு மதுரைத்திட்டம். வெறும் நூறு ஆண்டு, இருநூறு ஆண்டுகால வரலாறே உள்ள நாடுகள் எல்லாம் நூறு, இரு நூறு ஆண்டுகள் வரலாற்றையும் இலக்கியத்தையும் பொத்தி பொத்தி பாதுகாக்கும் இந்த உலகில், பல ஆயிரம் ஆண்டு வரலாறுகள் உடைய தமிழினம் கரையானிடத்தில் இலக்கியங்களை உண்ண கொடுத்துவிட்டு வரலாற்று கட்டிடங்களில் வரட்டியையும், திரைப்பட சுவரொட்டிகளையும் ஒட்டிக்கொண்டும் உள்ளோம். காலத்திற்கேற்ற மாற்றங்களோடு நம் வரலாற்றையும், நம் இலக்கிய சொத்துகளையும் சுவடிகளிலிருந்து காகிதத்திற்கு மாற்றினார்கள் நாமும் அதிலிருந்து மின்னனு முறைக்கு மாற்றி வரும் தலைமுறைகளுக்கு பரிமாறுவோம். பழஞ்சோறு மட்டுமல்ல, இங்கே புதிய வகைகளையும் சேர்த்தே படைப்போம். பழங்கால இலக்கியங்கள் மட்டுமின்றி, தமிழர் வரலாறு, ஆவணங்கள், இக்கால இலக்கியங்கள், கருத்துக்கள் என பலவற்றையும் தொகுக்கும் அதே வேளையில், தமிழ் ஆர்வலர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் திட்டங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டம் தமிழ் பற்றி, தமிழர் வாழ்வியல் பற்றி, தமிழர்களுக்கு கற்பிக்கும், இன்றைய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இதிலே பதிவு செய்து, உங்களுடைய விருப்பம் என்ன என்பதை திட்ட உறுப்பினர்களுக்கு அறிவியுங்கள். அதன் மூலம் உங்கள் தமிழ்த்தொண்டை வெளிச்சப்படுத்த இத்திட்ட நிருவாகத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள். சிலம்பு மதுரை திட்டம் - இது தமிழர்களுக்காக தமிழர்களின் முயற்சி, உங்களின் பங்களிப்பை வேண்டி இருக்கிறது இந்த சிலம்பு மதுரை திட்டம்.
|
Login |